ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய மஹா கணபதி ஸ்லோகம்


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய மஹா கணபதி ஸ்லோகம்

அகிஞ்ச நார்த்தி மார்ஜநம்
சிரந்தநோக்தி பாஜநம்
புராரி பூர்வ நந்தனம்
ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம்
தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதாந வாரணம்
பஜே புராண வாரணம் !


பொருள்  :

தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப் படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருக விடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.



Leave a Comment