சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்திருவிழா....


சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்திருவிழா! விண்ணைஅதிர வைத்தவானவேடிக்கை நிகழ்ச்சி!!

சிவகாசியின் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் போது தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பத்ரகாளியம்மனை மனதார நினைத்து வணங்கி வழிபடும் பக்தர்கள் தங்களின் பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான9ம்நாளன்று கயர்குத்து திருவிழா அதிவிமர்சையாக நடைபெற்ற போது  அருள் கூட்டும் செயல்பாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், கடைக்கோவில் என்ற அம்மன் கோவிலில் லிருந்து வண்ண விளக்குகளான புஷ்ப பல்லக்கில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய பத்ரகாளி அம்மன் ரத ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தை அடைந்தது.

கோவிலினுள் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக விண்ணை அதிரசெய்து, வர்ணஜாலம் காட்டும் விதமாக வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்ட காட்சி அனைவரின் கண்களையும் கவர்ந்தது. தொடர்ந்து திருவிழா நடந்து வரும் பட்சத்தில் வருகிற 12ம் தேதி வெள்ளிகிழமை  மாலை தேரோட்டம் நடக்கிறது.

 



Leave a Comment