சாமுண்டி மலையில் 15 அடி உயர நந்திக்கு  மஹாமஸ்தகா அபிஷேகம்!


 

சாமுண்டி மலையில் உள்ள 15 அடி உயர நந்திக்கு  மஞ்சளால் மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

15 அடி உயர நந்தி சிலை மைசூர் சாமுண்டிமலையில் பிரசித்தி பெற்ற  கோவில் அமைந்துள்ளது. மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல மலை அடிவாரத்தில் இருந்து ஆயிரம் படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

இதில் மலை மேல் இருந்து 200–வது படிக்கட்டுக்கும், மலை அடிவாரத்தில் இருந்து 800–வது படிக்கட்டும் மத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. இந்த சிலை 15 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்டது. இந்த நந்தி சிலை 200 ஆண்டு பழமைவாய்ந்தது. இந்த நந்திக்கு சில ஆண்டுகளாக மகா அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

 மகா அபிஷேகம் இதில் மகா நந்திக்கு குங்குமம், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், வெண்ணெய், நெய், இளநீர், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களாலும், வில்வ இலை, பலவகையான மலர்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திவ்ய பொருட்களாலும் அபிஷேகம் நடத்தப்பட்டது.

 ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

 



Leave a Comment