சித்ரகுப்தர் திருக்கோவிலில் சித்ரா பெளர்ணமி திருக்கல்யாண பெரு விழா


கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் தனி சன்னதியுடன் கோவில் கொண்டு அமைந்துள்ள உலக பிரசித்திப்பெற்ற சித்ரகுப்தர் திருக்கோவிலில் சித்ரா பெளர்ணமி திருக்கல்யாண பெரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளது. குறிப்பாக புண்ணிய நகரம்,முக்தி தரும் நகரம், நகரேஷூ காஞ்சி, என பல்வேறு பெயர் பெற்று விளங்கின்ற காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில்,உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படும் சித்ரகுப்தர் சுவாமிக்கு, தென்னிந்தியாவிலேயே தனி சன்னதியாக கோவில் கொண்டுள்ள சித்ரகுப்தர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண பெரு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டு சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண பெரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் சித்ரகுப்தர், கர்ணகி அம்பாளை காலை முதலே பொது மக்களும் பக்தர்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக  உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில,வெளியூரை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment