கும்பகோணம் சாரங்காபாணி சுவாமி ஆலய சித்திரை தேரோட்டம்...


கும்பகோணம் சாரங்காபாணி சுவாமி ஆலய சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் முக்கிய திருத்தலமாக விளங்குவது கும்பகோணம் சாரங்காபாணி சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவாக சித்திரை திருவிழா விளங்குகிறது.

புகழ் பெற்ற சாரங்கபாணி கோயில் திருத்தேர் தமிழக அளவில் உள்ள திருத்தேர்களில் பெரிய தேர் என அழைக்கப்படுகின்றது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருத்தேர் சுமார் 500 டன் எடையும் 110 அடி உயரமும் கொண்ட மிக பிரம்மாண்ட தேர் காண்பவரை கவரும் வகையில் காட்சியளிக்கின்றது.

 பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரோட்டத்தில் கலந்து கொண்டு சாரங்கா -சாரங்கா என பக்தி முழக்கமிட்டவறு சிவவாத்தியங்கள் ஒலிக்க திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்களோடு பக்தர்களாக 10 அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் வேடமிட்டு சென்ற பக்தரின் வருகை அனைவரையும் கவர்ந்தது இதனால் கும்பகோணம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 



Leave a Comment