ஸ்ரீதுன்முகி வருட குருப் பெயர்ச்சி பலன்கள்


 ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாகப் படைத்தார். பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

வியாழ நோக்கம்:

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ நோக்கம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்:

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

குரு மாற்றம்:

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.

கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு குரு பகவான் மாறும் முன்ஹேவிளம்பி வருடம் - ஆடி மாதம் 11ம் தேதி - இங்கிலீஷ் 27 ஜூலை 2017 அன்று - ராகு கடக ராசிக்கும் - கேது மகர ராசிக்கும் மாறுகிறார்கள். சனிப் பெயர்ச்சி இல்லை.

பொது பலன்கள்:

கன்னிக்கு மாறும் குருபகவான் கன்னியா லக்னத்திலேயே மாறுகிறார். கன்னிக்கு அதிபதி புதன். சூரியன் நக்ஷத்ரமான உத்திர நக்ஷத்ரத்தின் சாரத்தில் குரு பகவான் இருக்கிறார். குருப் பெயர்ச்சியின் போது சனி பகவான் குரு பகவானிற்கு தைரிய வீர்ய ஸ்தானத்திலும் - கேது ரண ருண ரோக ஸ்தானத்திலும் - ராகு விரையஸ்தானத்திலும் இருக்கிறார்கள். தொழில் துறை வளர்ச்சியடையும். பொருளாதாரம் நல்ல நிலையை அடையும். கல்வி சார்ந்த விஷயங்களில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்படும். அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு ஆதரவாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறை ஏற்றம் பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு நன்மக்கள் கிடைப்பார்கள். வயிறு சம்பந்தமான புதிதான வியாதி ஒன்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். திருமணம் அதிகமாக இருக்கும். தன்னுடைய வீட்டை குரு பார்க்க இருப்பதால் தெய்வம் சம்பந்தமான அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அன்னிய செலவானி அதிகரிக்கும்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

ஏற்றம் பெறும் ராசிகள்: ரிஷபம் - மகரம் - மீனம்

நடுத்தரமாக பலன்கள் பெறும் ராசிகள்: மிதுனம் - சிம்மம் - கன்னி - விருச்சிகம் - தனுசு

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் - கடகம் - துலாம் - கும்பம்

 குரு பகவானின் நக்ஷத்ர சஞ்சாரம்:

ஸ்ரீதுன்முகி வருஷம்:

ஆடி மாதம் 18ம் தேதி - நாழிகை 8.33 - உத்திரம் 2ம் பாதம் - சூரியன் சாரம்

ஆவணி மாதம் 03ம் தேதி - நாழிகை 35.04 - உத்திரம் 3ம் பாதம் - சூரியன் சாரம்

ஆவணி மாதம் 19ம் தேதி - நாழிகை 55.22 - உத்திரம் 4ம் பாதம் - சூரியன் சாரம்

ஆவணி மாதம் 26ம் தேதி - நாழிகை 26.00 - மேற்கே அஸ்தமணம்

புரட்டாசி மாதம் 4ம் தேதி - நாழிகை 32.52 - ஹஸ்தம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்

புரட்டாசி மாதம் 20ம் தேதி - நாழிகை 13.31 - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்

புரட்டாசி மாதம் 25ம் தேதி - நாழிகை 26.00 - கிழக்கே உதயம்

ஐப்பசி மாதம் 05ம் தேதி - நாழிகை 55.36 - ஹஸ்தம் 3ம் பாதம் - சந்திரன் சாரம்

ஐப்பசி மாதம் 22ம் தேதி - நாழிகை 51.46 - ஹஸ்தம் 4ம் பாதம் - சந்திரன் சாரம்

கார்த்திகை மாதம் 10ம் தேதி - நாழிகை 20.57 - சித்திரை 1ம் பாதம் - செவ்வாய் சாரம்

மார்கழி மாதம் 02ம் தேதி - நாழிகை 19.38 - சித்திரை 2ம் பாதம் - செவ்வாய் சாரம்

தை மாதம் 03ம் தேதி - நாழிகை 52.13 - சித்திரை 3ம் பாதம் - செவ்வாய் சாரம்

தை மாதம் 20ம் தேதி - நாழிகை 26.00 - வக்ரம் ஆரம்பம்

மாசி மாதம் 26ம் தேதி - நாழிகை 20.20 - சித்திரை 2ம் பாதம் - செவ்வாய் சாரம்

பங்குனி மாதம் 26ம் தேதி - நாழிகை 53.11 - சித்திரை 1ம் பாதம் - செவ்வாய் சாரம்

ஸ்ரீஹேவிளம்பி வருஷம்:

சித்திரை மாதம் 21ம் தேதி - நாழிகை 57.42 - ஹஸ்தம் 4ம் பாதம் - சந்திரன் சாரம்

வைகாசி மாதம் 18ம் தேதி - நாழிகை 26.00 - வக்ர நிவர்த்தி

ஆனி மாதம் 32ம் தேதி - நாழிகை 17.12 - சித்திரை 1ம் பாதம் - செவ்வாய் சாரம்

ஆடி மாதம் 26ம் தேதி - நாழிகை 57.58 - சித்திரை 2ம் பாதம் - செவ்வாய் சாரம்

ஆவணி மாதம் 17ம் தேதி - நாழிகை 8.32 - சித்திரை 3ம் பாதம் - செவ்வாய் சாரம்

                

                

 

 



Leave a Comment