தயாராகும் விநாயகர் சிலைகள்


இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, குடியிருப்புப் பகுதிகள், வீதிகள், முக்கியச் சந்திப்புகளில் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

இதற்காக சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு வடிவங்கள், அளவுகளில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை போளூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம் வட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கி வந்து தங்கள் பகுதிகளில் வைத்து வர்ணப் பூச்சு முடித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிறியது முதல் பல அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விநாயகர் சிலைகளை விற்பனைக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாபாரிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். அந்த வகையில், வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.



Leave a Comment