நவம்பரில் மூடப்படுகிறது பத்ரிநாத் கோயில்


குளிர்காலத்தை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 16ம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ரிநாத் கோயில் கடல் மட்டத்தில் இருந்து சரியாக 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
குளிர் காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோயில் முழுவதும் பனியால் மூடப்படும் என்பதால், ஆண்டு தோறும் குளிர்காலத்தில் மூடப்படுவது வழக்கம்.
எனவே, வரும் நவம்பர் மாதம் 16ம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்ட பிறகு, கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் நடை சாத்தப்படும் நிகழ்ச்சி சுமார் 5 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி, ஒவ்வொரு சன்னிதானத்துக்கும் தனித்தனி பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நடையாக ஒவ்வொரு நாள் சாத்தப்படுவது வழக்கம்.



Leave a Comment