திருப்பதி கோயிலில் செல்லிடப்பேசி செயலிக்கு பெயர் சூட்ட அழைப்பு


திருமலை திருப்பதி தேவஸ்தான செல்லிடப்பேசி செயலிக்கு பெயர் சூட்ட திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கு புத்தாண்டான யுகாதி அன்று அதாவது வரும் மார்ச் 29 செல்லிடப்பேசி செயலியை தொடங்க முடிவு செய்தது. இதன் மூலம் பக்தர்கள் எளிதாக ஏழுமலையானின் ஆர்ஜித சேவா, விரைவு தரிசனம் உள்ளிட்ட தரிசன டிக்கெட்டுகள், வாடகை அறை முன்பதிவு, ஏழுமலையானுக்கு நன்கொடை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை செல்லிடப்பேசி வாயிலாகப் பெற முடியும். இந்த செயலிக்கு இன்னும் தேவஸ்தானம் பெயர் வைக்கவில்லை.
இந்த செயலிக்கு பெயர் வைக்கும் வாய்ப்பை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி உள்ளது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் பெயர்களை onlineservices@tirumala.org என்ற மின்னஞ்சல் மூலமோ அல்லது 9399399399 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ மார்ச் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேவஸ்தானத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதிலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுத்து இந்த செயலிக்கு சூட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.



Leave a Comment