திருப்பரங்குன்றத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி கொடியேற்றம்....


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக்டோபர் 31 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.
அக்டோபர் 31 ஆம் தேதி அன்று காலை சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டு, விரதம் மேற்கெள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். காப்பு கட்டிக் கொள்ளும் பக்தர்கள் ஆறு நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி பால், பழம், துளசி, மிளகு உள்ளிட்ட பல்வேறு விரதங்கள் மேற்கொள்வர். தேன், சர்க்கரை கலந்த தினை மாவு கோயில் சார்பில் வழங்கப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 4ல் வேல் வாங்குதல், நவம்பர் 5ல் சூரசம்ஹாரமும், நவம்பர் 6 ஆம் தேதி காலையில் தேரோட்டம், மதியம் பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.
சஷ்டி விழா நடக்கும் நாட்களின் தினம் காலை 11:00 மணி, மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர்க்கு சண்முகார்ச்சனை நடக்கும்.



Leave a Comment