கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா


பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளல், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.
விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், ஆன்மீக உரை, அன்னதானம், பக்தி இன்னிசை, அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

10-ஆம் நாள் திருவிழாவான அக்டோபர் 11-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10.30 மணிக்கு தேவி அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல், காலை 10.30 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 1 மணிக்கு தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்குப் புறப்படுதல் ஆகியவை நடைபெறும். அப்போது கோயில் முன்வாயிலில் காவல்துறை சார்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை செய்யப்படும்.



Leave a Comment