ஸ்ரீசைலம் கோயிலில் தரிசன டிக்கெட் உயர்வு....


ஸ்ரீசைலத்திலுள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது, ஆந்திரத்திலுள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அவர்களுக்காக, காலை முதல் இரவு வரை பல வகையான தரிசன சேவைகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டணத்தை திடீரென உயர்த்தி கோயில் நிர்வாகம் உத்தவிட்டுள்ளது.
இனி, வரும் காலங்களில் ஸ்பரிச தரிசனம் காலை 6.30 முதல் 10.30 மணி வரையும், மீண்டும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நேரங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அலங்கார தரிசனத்தில் மட்டும் சிவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்டின் கட்டணம் குறைவாக இருப்பதால், கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகம் உள்ளதாகவும், கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்தவும், கோயிலின் மற்ற செலவுகளை சமாளிக்கவும் தரிசன டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. விரைவில், ரூ. 10 ஆயிரத்தில் புதிய தரிசன சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment