திருப்பதி திருக்குடை ஊர்வலம் .....


இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விசுவ இந்து பரிஷத் சார்பில் திருக்குடை ஊர்வலம் ஆண்டுதோறும் சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு பிரமோற்சவத்தன்று சென்றடையும்.
இதன்படி இந்தாண்டு செப்டம்பர் 26ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று 21 திருக்குடைகளுடன் ஊர்வலம் தொடங்குகிறது.
திருக்குடை ஊர்வலம் சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை, பைராகி மடம் பெருமாள் கோயில்-வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு குடைகள் யானைக்கவுனியை கடக்கிறது. அன்று இரவு அயனாவரம் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் தங்குகிறது.
செப்டம்பர் 27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஏகாங்கிபுரம் துளசிவணமால ஸ்ரீ பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பூஜை முடிந்து திருக்குடை ஊர்வலம் புறப்படும். அன்றைய தினம் இரவு ஆவடி ஸ்ரீ கல்யாணராமர் கோயிலில் தங்குகிறது.
செப்டம்பர் 28ம் தேதி காலை ஆவடி சிவா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. அன்றைய தினம் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில் திருவள்ளூர் வீரராகவர் கோயில் சென்று இரவு புத்தூர் தர்மராஜா கோயிலில் தங்குகிறது. 29ம் தேதி காலை 7 மணிக்கு தர்மராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் அலமேலு மங்காபுரம் வழியாக திருப்பதிக்கு சென்றடைந்து பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. 30ம் தேதி திருப்பதி கோயிலில் உற்சவம் நடைபெறுகிறது.



Leave a Comment