புரட்டாசி ....பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்


தமிழ் மாதமான புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு. புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக பக்தர்கள் கருதுகின்றனர். அதன்படி சனிக்கிழமை அதிகாலை பெருமாள் திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பெருமாள் கோயில்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
பக்தர்கள் துளசி, அருகம்புலம் மாலைகளையும், பூக்களையும் வாங்கி பூஜை செய்தனர். பூஜைக்குப் பின்னர் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
பக்தர்கள் நெரிசலை தீர்த்து அவர்களை முறைப்படுத்திச் செல்ல கம்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதில் வரிசையாக சென்றனர்.



Leave a Comment