மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச ஒலிவடிவ வழிகாட்டி....


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குறித்து அறிய இலவச ஒலிவடிவ தகவல் வழிகாட்டி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு அசூரோ டெக்னாலஜீஸ் பொறியாளர் ஸ்ரீகாந்த் அய்யர் குழுவினர் உருவாக்கி இந்த இலவச தகவல் வழிகாட்டி APP ஐ உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோயில் குறித்து முழு தகவல்களை அறிய இயலும். இதன் ஒலி தகவல், எளிய பேச்சு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் 23 முக்கிய இடங்கள் குறித்து, 45 நிமிடங்கள் கேட்கும் வகையில் இந்த ஒலி வடிவ அமைப்பு உள்ளது. பக்தர்கள் அந்தந்த இடங்களை பார்த்து ரசித்தபடி சுற்றுலா வழிகாட்ட்டி விளக்குவது போன்ற உணர்வுடன் கேட்டு மகிழலாம்.
அலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் 'PINAKIN' என்ற அப்ளிகேஷனை தேடி, அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின், அதை (PINAKIN) திறந்து ஓ.டி.பி., மூலம் உங்கள் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும்.
'PINAKIN' எனும் இலவச அலைபேசி அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, ஒரு முறை பதிவு செய்த பின், இணையதள வசதி இல்லாமலும் இந்த ஒலிவடிவத்தை கேட்கலாம்.



Leave a Comment