திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம்


பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி 29 ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 1 ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி - தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். அரோகரா முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.



Leave a Comment